
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. 25ஆம் தேதி தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இங்கு அன்னவாசல் வேளார் தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் ஆறுமுகம் (வயது 20), தனது சகோதரியுடன் திருவிழாவுக்குச் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, அவரது சகோதரியை அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பாலமுருகன், விஜய், மனோஜ் குமார் உள்ளிட்ட 7 பேர் கிண்டல் செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட ஆறுமுகத்தை அவர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்தக் காயமடைந்த ஆறுமுகம், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.