
திருச்சி, ஓ.எப்.டி. அண்ணா நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் ஒரு வெல்டீங் பட்டறை நடத்திவந்தார். இவர், ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியிருக்கிறார். அந்தக் கடணுக்கான தவணையை அவர் செலுத்தமுடியாமல் போக, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சேகரை திட்டியுள்ளனர். மேலும், அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் மன உளைச்சல் அடைந்த சேகர், திருச்சி நீதிமன்ற வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடலில் தீப்பற்றிய நிலையில், வேதனையில் துடித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அவர் மீது மண்ணை வாரி இறைத்தும், தீ தடுப்பு கருவிகள் உதவியுடன் தீயை அணைத்தனர். அதன்பிறகு, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், சேகரை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.