Youth passes away near coimbatore Madukarai police investigation

Advertisment

கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமியின் மகன் ரமேஷ் (23). இவர், கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் சி.என்.சி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். ரமேஷ், நேற்றிரவு நண்பர்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிவந்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தில் பாலக்காடு எல்.என்.டி. பைபாஸ் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, போடிபாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் அவரது இருசக்கர வாகனத்தை வழி மறித்தனர்.

வழிமறித்த அவர்கள், திடீரென ரமேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தகவல் அறிந்த மதுக்கரை போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், எதற்காக இந்த கொலை நடந்தது? கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.