Skip to main content

மணிமுத்தாறு டேம் தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு...

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

Youth passes away manimutharu dam while playing in river

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகில் உள்ளது மணிமுத்தாறு அணை. கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீரைத் தேக்கி வைப்பதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பெரிய அணை கோமுகி அணை. தற்போது பெய்த மழையில் டேம் நிரம்பி வழிகிறது. இதைக் காண்பதற்காகச் சுற்றுலா செல்வது போல பல மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ச்சியோடு செல்கிறார்கள். 

 

அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தளிகைவிடுதி பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஆனந்தராஜ் (வயது 28). இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தனது நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் நான்கு பேருடன் மணிமுத்தாறு அணையைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். 

 

தண்ணீரைக் கண்ட மகிழ்ச்சியில் நால்வரும் கோமுகி அணைப்பகுதி ஓரம் அமர்ந்து குளித்துள்ளனர். நால்வருக்குமே நீச்சல் தெரியாததால் அப்படி குளித்துக் கொண்டிருந்த போது ஆனந்தராஜ் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளார். மற்ற மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனந்தராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அவரது குழுவினர் விரைந்து வந்து கோமுகி அணைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு ஆனந்தராஜ் உடலைச் சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறப்பதும், ஏரி, குளம், அணைக்கட்டு போன்ற இடங்களில் உள்ள தண்ணீரில் நீச்சல் தெரியாமல் இளைஞர்களும் சிறுவர்களும் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருவதும் வேதனைக்குரியது என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

tirunelveli district manimuthar dam opening cm palanisamy order

 

 

மணிமுத்தாறு அணையில் இருந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவிடும்படி, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

 

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01/11/2020 முதல் 31/03/2021 முடிய 151 நாட்களுக்கு 417.74 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அணையிட்டுள்ளேன்.

 

இதனால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

தமிழகத்தில் முதன்முறையாக மணிமுத்தாறு அணையில் சோலார் படகு இயக்கம்!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவிக்கென சிறப்பிடம் உண்டு.
 

மணிமுத்தாறு பகுதியை சூழலியல் சுற்றுலா தலமாக மாற்றிய வனத்துறை, அங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 1.8 கோடி செலவில் புதிய சாலையை மாதக்கணக்கில் அமைத்து வருகிறது. இதன் விளைவாக மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனத்திற்கும் வனத்துறை உள்ளாகியது. இந்நிலையில் மணிமுத்தாறை மீண்டும் பழையபடி சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

nellai district manimuthar dam solar boat peoples happy


 

புத்தாண்டு (01.01.2020) முதல் பயணிகள் மணிமுத்தாறின் அருவிச் சூழலை அனுபவிக்கும் வகையில் படகு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதம் மும்பையில் இருந்து 50 லட்சம் செலவில் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் படகு வாங்கப்பட்டு, மணிமுத்தாறு வந்து சேர்ந்தது. அந்தப் படகை மணிமுத்தாறு செக் போஸ்ட்டுக்கு எதிரே நிறுத்தியுள்ளனர். இப்படகில் ஒரே சமயத்தில் 25 பேர் பயணிக்க முடியும்.

nellai district manimuthar dam solar boat peoples happy

மணிமுத்தாறு அணையில் தற்போது 115 அடி தண்ணீர் உள்ளது. எனவே சோலார் படகு பயணத்தை தொடங்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்து, நேற்று (1ம் தேதி) புத்தாண்டு முதல் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வனவர் முருகேசன் தலைமையில் படகு பயணத்திற்கான சோதனை ஓட்டம் நடந்தது. தமிழகத்திலேயே முதன்முறையாக சோலார் படகு மணிமுத்தாறு அணையில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.