/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3883.jpg)
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு விஜய் (25) என்ற மகன் உள்ளார். விஜய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்ததால் அவரது பெற்றோர் விஜய்யை கண்டித்துள்ளனர்.
இதனால் மன வேதனையில் இருந்த விஜய், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் இறந்து விட்டதாகத்தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)