Advertisment

உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை! 

youth passes away in chidambaram police investigation

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் திடல்வெளி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அண்ணாமலை நகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

முதல் கட்ட விசாரணையில், அண்ணாமலை நகர் திடல்வெளி பகுதியைச் சேர்ந்த சதீஷ்(28) என்பவருக்கும், அருண்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 7 வருடத்திற்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் காணும் பொங்கல் தினத்தில் இவர்கள் அந்தப் பகுதியில் குடிபோதையில் புள்ளித்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி சதீஷ், அருண்பாண்டியன் தலையை அறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், குற்றவாளியை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Advertisment
police Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe