/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vizhupuram-in_2.jpg)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது சஞ்சீவிராயன் பேட்டை. இந்த ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் ராஜசேகர் வயது 25 அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்ததாகவும் இவர் குடியிருந்த வீட்டின் அருகே கிணறு ஒன்று இருந்துள்ளது.
அந்தகிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து நீண்ட நேரம்செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார் போதையில் இருந்ததாலும் தூக்க கலக்கத்தினாலும் செல்போன் பேசியபடியே தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். நீண்ட நேரம் அவரை காணாததால் அப்பகுதியில் இருந்த அவரது உறவினர்கள் தேடிப் பார்த்தபோது கிணற்றுக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து ராஜசேகரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். தங்களை மறந்து செல்போனில் சுவாரசியமாக பேசிக்கொண்டு எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து ராஜசேகர் போன்று செல்போன் பேசிக்கொண்டே விபத்தில் சிக்கிக் கொள்வதும் ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு நடந்துகொண்டு செல்பி எடுக்கும் மோகத்தில் பலர் ரயிலில் அடிபட்டும் நீர்நிலைகளில் விழுந்தும் இறந்து போகிறார்கள்.
சிலர் டூவீலர் ஓட்டிக்கொண்டே செல்பி எடுத்து விபத்தில் இறந்தவர்களும் உண்டு. செல்போன், மனிதர்களின் தொடர்புக்கு இன்றியமையாதது அதே நேரத்தில் அதில் முற்றிலும் தங்களை மறந்து அதில் மூழ்கி உயிரை விடுகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)