Published on 16/08/2021 | Edited on 16/08/2021

சென்னை முத்தமிழ்நகர் பகுதியைச் சோந்த ராம் என்பவரின் மகன் கிருஷ்ணராமன் (22). இவரும் இவரது நண்பர் திருவள்ளூர் மாவட்டம், கட்டபொம்மன் சாலைப் பகுதியைச் சோந்த ஜெ. சதீஷ் (22) ஆகிய இருவரும் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு நேற்று பைக்கில் சென்றனர்.
அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் அருகே இருவரும் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிருஷ்ணராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனிருந்த சதீஷ், பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம், கொள்ளிடம் போலீஸார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த சதீஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.