youth passed away who arrested under pocso act

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சன்னியாசிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(21). இவர், செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியிடம் கேட்டதில் மாணவி உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து திடீரென பள்ளி மாணவியை கடந்த 2001ஆம் ஆண்டு ராஜா கடத்திச் சென்றுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜா தனக்கு காதலித்த பெண் கிடைக்கவில்லை என்று நினைத்து மனம் வெதும்பி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்று பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தில் செங்கல் சூளை வேலைக்கு சென்ற ராஜா வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென காதலின் நினைவு வரவே கையில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கினார். உடனடியாக அவரை பணியாளர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ராஜாவின் தாயார் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.