Advertisment

விழுப்புரத்தில் கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை

Youth passed away in viluppuram who in finance

Advertisment

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரபாகரன்(32). இவருக்கு திருமணமாகி இலக்கியா என்ற மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். பிரபாகரன் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 3 அளவில் விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் பகுதியில் பிரபாகரன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் போலீசார் விரைந்து சென்று மரிய பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரபாகரன் கொலை குறித்து துப்பறிவதற்காக போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். மரிய பிரபாகரனை யார் கொலை செய்திருப்பார்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

முதல் கட்ட விசாரணையில் பிரபாகரன் சில தினங்களுக்கு முன்பு நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மது குடித்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அது குறித்து விசாரிக்க பிரபாகரனுடன் இருந்த இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரன் சின்னகுச்சி பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் தங்கள் பைனான்ஸ் கம்பெனிக்கு தரவேண்டிய பணத்தை கேட்டு கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe