Youth passed away viluppuram police in investigation

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் தவமணி(38). இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடலாடி குளம் டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அதே கடைக்குப் பின்புறம் சென்ற தவமணி, மது பாட்டிலில் விஷத்தைக் கலந்து கொண்டு அதை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

அவர் அந்த விஷம் கலந்த மதுவைக் குடிப்பதற்கு முன்பாக, தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதை தனது மனைவிக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில், இரண்டாவது முறையாக எனக்கு சேர வேண்டிய சொத்தை தராமல் எனது சகோதரி தனது பிள்ளைகளுடன் சேர்ந்து ஏமாற்றி விட்டார். அதனால் மன உளைச்சலில் இருக்கிறேன். இனி வாழ்வதில் அர்த்தமில்லை. பெத்த தாயே தனது பிள்ளைக்கு துரோகம் செய்யும் போது வேறு யாரை நம்ப முடியும். எனவே சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என்று கூறியபடி விஷம் கலந்த மது பாட்டிலை எடுத்துக்குடித்துள்ளார்.

Advertisment

இந்த வீடியோவை வைத்து காவல்துறையில் அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.