/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3144.jpg)
சிதம்பரம் அடுத்த நஞ்ச மகத்து வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஐயப்பன். கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகியம்மாள் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை(30ஆம் தேதி) கண்ணங்குடி கோனங்குளத்தில் தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்துள்ளார். உடலைக் கண்ட பொதுமக்கள் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த போலீசார், கோனங்குளத்திற்கு விரைந்துவந்து உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் கொலைக்கான காரணம் மது போதையால் நடந்ததா? முறையற்ற தொடர்பா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)