Advertisment

சிதம்பரத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை!

Youth passed away in Chidambaram

சிதம்பரம் வடக்கு தெருவைச்சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு(35), இவர் வெள்ளிக்கிழமை காலை தில்லைக் காளியம்மன் கோயில் எதிரே உள்ள ஒரு டிபன் கடையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த இரண்டு நபர்கள் உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ராமு இறந்து போனார்.

Advertisment

இது குறித்து தகவல் பேரில் சிதம்பரம் ஏ எஸ் பி ரகுபதி மற்றும் நகரப் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ராமுவை வெட்டிக் கொலை செய்த தில்லைக் காளியம்மன் கோயில் தெரு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தசெல்வம் மகன் சத்யேந்திரன் (21), அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் கணேசன் (26) என்கிற இரண்டு நபர்களும் சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Youth arrested police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe