Youth passed away in Cauvery river floods

Advertisment

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் குளித்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர் பலியானர். மற்றொருவரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார்(25), வெங்கடேஷ்(22) இருவரும் அண்ணன் தம்பி. இவர்கள் இருவரும், கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் சென்றுகொண்டிருந்த காரணத்தினால் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் வெங்கடேஷை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில், வெங்கடேஷ் மருத்துவமனையில் பரிதாபமாக பலியானார். மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட அருண்குமாரை முசிறி தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.