Advertisment

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்! கொலையில் முடிந்த சகோதரர்களின் கோபம்! 

Youth passed away case police registered case prisoner

திருச்சி அரியமங்கலம்ஹவுசிங்போர்டுபகுதியில் ரிஷி என்ற 19 வயது இளைஞர், கடந்த 12ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில்குற்றவாளிகளைப்பிடிக்கத்தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குற்றவாளிகளைத்தீவிரமாகத்தேடிவந்தனர்.

Advertisment

இந்நிலையில், இந்த கொலை வழக்குதொடர்பாகத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தஹரிஷ், திருச்சிதிருவெறும்பூர்கல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,மேலகல்கண்டார்கோட்டைபகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று வாலிபர்கள் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். அதேபோல், தனிப்படைபோலீசார்நேற்று முன்தினம்மேலகல்கண்டார்கோட்டைபகுதியைச் சேர்ந்த சதீஷ்என்பவரைக்கைது செய்தனர். மேலும் நேற்று அதே பகுதியைச் சேர்ந்தஹரிஹரசுதன், புதுச்சேரியைச் சேர்ந்தஹேமச்சந்திரன்ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

Advertisment

இந்த கொலைசம்பவத்திற்குச்சிறையிலிருந்து திட்டம் தீட்டிய கமலக்கண்ணன், சரவணகுமார் ஆகியோர் மீது தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்துபிடிபட்டவர்களிடம்நடைபெற்ற விசாரணையில், ரிஷிதஞ்சாவூரைச்சேர்ந்தஹரிஷ்என்பவருடையதங்கையைக்காதலித்துள்ளார். அதேபோல் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணகுமார் என்பவருடைய தங்கையையும் காதலித்துள்ளார். இதையடுத்து தனதுதங்கையைக்காதலிப்பது குறித்துஹரிஷ், சிறையில் உள்ள தனது நண்பரான சரவணகுமாரிடம் கூறியுள்ளார். அதேபோல் சரவணகுமார் தனது தங்கையை ரிஷி காதலிப்பதாகஹரிஷிடம்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திட்டம் தீட்டி தங்கள் நண்பர்கள் உதவியுடன் இந்தகொலையைச்செய்ததாகத்தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe