/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3454.jpg)
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள மூவாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). நெல் வியாபாரியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரைக்காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறிநெருங்கிப் பழகியதில் மாணவி கர்ப்பமானார். மகளின் போக்கில் மாற்றம் கண்ட அவரது தாய் அதுகுறித்துவிசாரித்ததில் நடந்த சம்பவத்தை சிறுமி அழுதபடி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மகளைக் கண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.மயங்கிக் கிடந்த மாணவியைஉறவினர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச்சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து, டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னை அபிராமி விசாரணையை மேற்கொண்டு, மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணமான சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத்தேடி வந்தனர்.
இந்த நிலையில், தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்து சுரேஷ் தலைமறைவாகி நேற்று தூத்துக்குடிக்கு சென்று அங்குள்ள தனியார் லாட்ஜில் இரவு அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று மதியம் வரை அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அங்கிருந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்ததில் அவர் சடலமாகத்தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தூத்துக்குடி போலீசார் சுரேஷ் உடலைக் கைப்பற்றி அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு மூவாநல்லூரில் உள்ள அவரது உறவினருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணைக்குப் பயந்து சுரேஷ் தூக்கு மாட்டித்தற்கொலை செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மூவாநல்லூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)