/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/03_104.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வி.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் பவன்குமார்( 22 ). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்த பவன்குமார் இன்று தனது விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது கால் தவறி அருகே இருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார், அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி 80 அடி ஆழமுள்ள கிணற்றில் பவன் குமாரை சடலமாக மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)