/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/03_98.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை முதல் நெல்லூர் பேட்டை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே குடியாத்தம் சித்தூர் சாலையில் சித்தூர் கேட் அருகே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அர்ஜுன்(30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்த அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் டூ சித்தூர் சாலையில் தினமும் ஏராளமான கனரகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாகக் கூறி உயிரிழந்த அர்ஜுன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் சித்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார்பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். விபத்துகள் ஏற்படாவதவாறு ஒப்பந்த நிறுவனம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர்அதிகாரிகள் சரியென்ற பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)