Advertisment

இளைஞர் படுகொலை... மர்ம நபர்களை வலை வீசி தேடிவரும் காவல்துறையினர்!

Youth massacre ... Police searching for mysterious people

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே இளைஞர் படுகொலையான வழக்கில், போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஞானம்பெற்றான் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோவிந்தன் (40). பட்டதாரியான இவர், முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர். இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுவதற்காக, நேற்று முன்தினம் (12.07.2021) இரவு சென்றுள்ளார்.

Advertisment

நேற்று காலை வெகுநேரமாகியும் இவர் திரும்பவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இவரை காணவில்லை. இந்த நிலையில், உடலில் வெட்டுக் காயங்களுடன், தனது கரும்புத் தோட்டத்தின் அருகே இவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்குதிருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

மேலும், திருக்கோவிலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். இருப்பினும், இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

farmland kallakurichi youth murders
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe