
சென்னையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வியாசர்பாடி சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட்டு, அதன் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலங்களாகவே பரோட்டா சாப்பிட்டவர்கள் இதுபோன்று உயிரிழப்பது தொடர்பான செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)