
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே மேட்டு வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் சென்னை ரெட்டில்ஸ் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த வந்த தட்சிணாமூர்த்தி அவருடைய விவசாய நிலத்தில் நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 பே கொண்ட மர்ம கும்பல் ஒன்று தட்சிணாமூர்த்தியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியின் உடலை பார்த்துக் கதறி அழுதனர்.
இதையடுத்து நெமிலி சாலையில் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.