nn

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் புறப்பட்டபோது வாலிபர் ஒருவர் ஓடிவந்து ஏற முயன்ற போது தவறி கீழே விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார் என்றும் இவர் வாரம் முழுவதும் காட்பாடியிலும் வாரத்தின் விடுமுறை நாட்களில் அரக்கோணத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் அக்கா வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னைக்கு செல்ல அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது அங்கு இரண்டாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஏலகிரி விரைவு ரயில் கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஷாம் டேவிட் நேசகுமார் ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி ரயிலுக்கும் நடைமேடைக்கு இடையே சிக்கி உடல் துண்டாகி அதே இடத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டு சுமார் பத்து நிமிடங்கள் கால தாமதமாக மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisment