Advertisment

சில்லி சிக்கன் கடைக்குச் சென்ற இளைஞர்கள் கடத்தல்..! 

Youth kidnapped after going to a chilli chicken shop ..!

Advertisment

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜ், ஆலிவர், ஆதி, மதன் குமார் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் அனைவரும் கணபதிபுரம் பகுதியிலுள்ள சில்லி சிக்கன் கடைக்குச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பொன்மலை கணேசபுரத்தைச் சேர்ந்த பிரபு(33), சோனி என்கிற பரத்(23), செந்தில்குமார்(37), சூர்யா ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்த 4 பேரையும் அடித்து இழுத்துச்சென்று செந்தில்குமார் வீட்டில் வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீஸார் கடத்தல் மற்றும் வழிப்பறி பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சூர்யா என்பவரிடம் இந்த சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe