ஈரோடு கஸ்பாபேட்டை சேர்ந்தவர் அபிமன்யூ (23). கூலி தொழிலாளி. இவர் ஈரோட்டைச் சேர்ந்த 16 சிறுமியிடம் நெருங்கி பழகி உள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை அபிமன்யூ பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனை அடுத்து போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து அபிமன்யூவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.