இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசிக்கொண்டே சென்றவர் செல்போன் திடீரென வெடித்ததில் நடு சாலையிலேயே நிலைதடுமாறிகீழே விழுந்து காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT ACCIDENT

Advertisment

ஓசூரைசேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஓசூரில் இருந்து புலியூருக்கு அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் செல்போனில் பேசியபடியே சென்றுள்ளார். அப்போது சூலகிரி என்ற இடத்தின் அருகே திடீரென அவரதுசெல்போன் வெடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

செல்போன் வெடித்து சிதறியதில் அவரது இடது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். செல்போன் வெடித்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment