Advertisment

வீட்டில் தனியாக இருந்த பெண்; உள்ளே நுழைந்த இளைஞர் - இரவில் நடந்த பயங்கரம்!

youth incident a woman who was alone at home in Tiruvarur

திருவாரூர் அருகே உள்ளது இளவங்கார்குடி ராஜகுரு நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். 50 வயதான இவருக்கு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிரபாவதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நாகநாதன் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதால், 40 வயதான பிரபாவதி மட்டும் இளவங்கார்குடி ராஜகுரு நகர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிரபாவதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவாரூர் தாலுகா போலீசார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பிரபாவதியின் சகோதரா் ஜெயக்குமாா் கொடுத்த புகாரின் பேரில், திருவாரூர் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாா் கொலையாளியை விரைந்து பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீஸாா் குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்த கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் சந்தோஷ் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

Advertisment

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரபாவதியை கொலை செய்த அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவத்தன்று காலையில் கேபிள் வேலை பார்த்த சந்தோஷ் பிரபாவதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, இரவு 9 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது, சந்தோஷ் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாவதி, அவரை தடுக்க தற்காப்புக்காக அரிவாளால் தாக்க முயற்சித்துள்ளார். ஆனால், சந்தோஷ் பிரபாவதியிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி, பிரபாவதியை கழுத்து அறுத்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்சந்தோஷிடம் இருந்து பிரபாவதி வீட்டில் திருடப்பட்ட தாலி, நான்கு பவுன் செயின், கொலுசு, மற்றும் செல்போனை தனிப்பாடை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் வெகுவாக பாராட்டினாா்.

பிரபாவதி வீட்டில் நகைக்காக கேபிள் டிவி ஆபரேட்டர் சந்தோஷ் கொலை செய்து கொள்ளையடித்தாக கூறும் போலீசார், திருடிச்சென்ற பிரபாவதியின் செல்போனில் சந்தோஷ் தன்னுடைய சிம்கார்டை மாற்றி பயன்படுத்தியதால் சிக்கியதாகத் தகவல் தெரிவித்தனர். திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கேபிள் டிவி ஆபரேட்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police woman Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe