இளைஞர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை! 

youth incident ranipet district police investigation

மயானத்தில் இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாணாவரம் காவல் நிலையத்துக்கு இன்று (10/07/2022) காலை அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் காவல்துறையினர், இளைஞர் துண்டு துண்டாக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதைபார்த்து அதிர்ச்சியாகி உடனே இதுக்குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறினர்.

youth incident ranipet district police investigation

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் வந்தராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன், டி.எஸ்.பி. பிரபு ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவரின் மகன் 22 வயதான சரத்குமாா் என்பது தெரிய வந்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரத்குமார் என்பவரை கொலை செய்த மரம் நபர்களை ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளா் தீபன் சத்யான், துணை காவல் கண்காணிப்பாளா் பிரபு தலைமையிலான காவல்துறையினர், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அந்த இளைஞரின்உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

inicdent ranipet Youth
இதையும் படியுங்கள்
Subscribe