கோவை ஈஷா யோகாமையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ரமணா (28) என்ற இளைஞர் கோவை ஈஷா யோகாமையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி கோவை ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட ரமணாவின் உடல் தற்பொழுது கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.