youth incident his friend near Ponneri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர்சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான விஷ்ணு என்பவருக்கும் சென்னை புழல் நடுவன் சிறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் விஷ்ணுவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து பலமுறை இருவரையும் ஏற்கெனவே லட்சுமணன் கண்டித்த நிலையில் நேற்று இரவு லாவகமாக விஷ்ணு லட்சுமணனை தனது சொந்த ஊரான தோட்டக்காடு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். மனைவி உடனான திருமணத்தை மீறியஉறவை தட்டிக் கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை நண்பனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது