Advertisment

அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் தற்கொலை

Youth incident in government hospital premises

பழனியில் அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்குபகுதியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் காரைக்குடியைச் சேர்ந்த சரவணபாரதி என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஓட்டுநராகப் பணியாற்றி வந்த சரவணபாரதிக்கு கடன் தொல்லைகள் அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்குபகுதிக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சரவணபாரதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisment

மருத்துவமனை வளாகத்தில் காலை நேரத்தில் மரத்தில் தூக்கு போட்டுசடலமாகத் தொங்கியவரைபார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மக்கள் அதிகம் வந்து போகும் பழனி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ஒருவர் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

incident pazhani police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe