Advertisment

நாகையில் பட்ட பகலில் இளைஞர் படுகொலை!

நாகையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அவரது நன்பர்களே வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

நாகப்பட்டினம் நடராஜபிள்ளை தெருவை சேர்ந்த இளைஞர் அருண். சாராயம் கடத்தி வருவது, பிக்பாக்கெட் அடிப்பது செயின் பறிப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட படுபாதக செயல்களில் ஈடுபட்டதாக நாகை நகர காவல்நிலையத்தில்அருண் மீதுபல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு தனது நண்பர்களான ராபர்ட், மாதவன் உள்ளிட்ட சிலரோடு வந்திருக்கிறார், ஆஜராகிவிட்டு நாகை அக்கரைகுளம் அருகேயுள்ள பாழடைந்த வீட்டில் மூவரும் கஞ்சா குடித்தபடியே மது அருந்தியுள்ளனர்.

 Youth incident in daylight in nagai

அப்போது, போதை தலைக்கேறிமூவருக்குள்ளும் ஏற்பட்ட வாய் தகராறு, வாக்குவாதமாகி, கைகலப்பாகியது. ஆத்திரம் அடைந்த ராபர்ட்டும், மாதவன் அருணை முதுகில் மறைத்து வைத்திருந்த கத்தியாலும், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர், கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

அருணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகை நகர போலீசார் தப்பிச்செல்ல முடியாமல் போதையில் மட்டையாகி தூரத்தில் கிடந்த ராபர்ட், மாதவன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சமயத்தில் சம்பவ இடத்திற்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு குற்றவாளிகளை கைது செய்த நாகை நகர போலீசார் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Investigation police murder nagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe