Youth incident by moving train

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் சென்னையில் உள்ள தனியார் தபால் சேவை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான ரவீந்திரன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் வழக்கம்போல் முரளி முகவர்களிடமிருந்து தபாலை சேகரித்துக் கொண்டு அத்திப்பட்டு தொடர்வண்டி நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் புறநகர் தொடர்வண்டியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் சக பயணிகள் கண்முன்னே முரளியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் காயம் அடைந்த அவரை பயணிகள் மீட்டு தொடர்வண்டி நிலையத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக இறக்கினர். அப்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை தொடர்வண்டி பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மடக்கி பிடித்தார்.

Advertisment

இந்த நிலையில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், அங்கேயே முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை தொடர்வண்டி காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்துசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.