
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே திருமண நிகழ்வில் கேட்டரிங் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர்கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் அந்த ரசத்தையே திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டதாகத்தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ளது அத்திப்பட்டு புதூர் நகர் பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் சதீஷ்குமார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் ஒன்றில் பணிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கேட்டரிங் பணிக்காக சென்றிருந்த சதீஷ்குமார் திடீரென கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் இளைஞர் விழுந்த ரசத்தையே திருமண நிகழ்வில் விருந்தினர்களுக்கு பரிமாறியதாக உயிரிழந்த இளைஞர் சதீஷின் தாயார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us