Advertisment

போலீசாருடன் வாக்குவாதம்! - அடையாறு கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்!

koovam

அடையாறு கூவம் ஆற்றில் நள்ளிரவில் குதித்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னை அடையாறு கூவம் அருகில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் அங்கு இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததுள்ளார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குபின் முரனாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என போலீசார் சோதனை செய்துள்ளனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அதில் அவர் மது மதுஅருந்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரின் இருசக்கரத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர் இருசக்கரத்தை தருமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வண்டியை தராவிட்டால் கூவத்தில் குதித்து விடுவதாக இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். எனினும், போலீசார் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் அடையாறு கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதனால், பதறிப்போன போலீசார் இளைஞர் கரை சேருகிறாரா என்பதை கண்கானித்து வந்தனர். நீண்ட நேரம் ஆகியும் அந்த இளைஞர் கரை சேராததால், தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடிய விடிய தேடியும் அந்த இளைஞர் கிடைக்காததால், அவரது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

adayar kovam river
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe