தூக்கத்திலேயே இளைஞர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

nn

திருவண்ணாமலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரை வீடு புகுந்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் சிறுநாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். தோட்டத்தின் மையத்தில் தனியாக அமைந்துள்ள வீட்டில் கார்த்திகேயன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உள்ளே புகுந்த சில மர்ம நபர்கள் சரமாரியாக கார்த்திகேயனை வெட்டியுள்ளனர். அதேபோல் தடுக்க வந்த கார்த்திகேயனின் தாத்தாவையும் தாக்கியுள்ளனர்.

கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். முதியவர் கோபால் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தோட்டத்து வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம கும்ப கும்பலால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் அண்மையில் பொள்ளாச்சியில் தோட்டத்து வீட்டில் புகுந்து மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

incident police thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe