Advertisment

காதல் தோல்வியால் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Youth committed incident railway tracks due to love failure

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள சொக்கநாதபுரம் ஊரைச் சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகன் 22 வயது ராஜரத்தினம். இவர் நேற்று செந்துறை அருகே சென்னை - திருச்சி ரயில்வே இருப்புப் பாதையில் தலைவைத்துப் படுத்துள்ளார். அந்த நேரத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற வைகை அதிவிரைவு ரயில் வந்துள்ளது தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்த ராஜரத்தினம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜரத்தினம் உயிரிழந்தார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தான் விருத்தாசலம் இருப்புப் பாதை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார் ராஜரத்தினம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

ராஜரத்தினம் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.முதல்கட்ட விசாரணையில் ராஜரத்தினம் காதல் தோல்வியின் காரணமாகத்தண்டவாளத்தில் படுத்துத்தற்கொலை செய்து கொண்டதாகத்தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்விக்காக ரயில் முன்பு படுத்து உயிரைப் பறிகொடுத்த இளைஞரின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

police railway Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe