Youth commits suicide by hanging in Coimbatore ..!

Advertisment

கோவை சூலூர் பள்ளபாளையம் நஞ்சப்பத்தேவர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அசோகனின்மகன் கிருஷ்ணகுமார் ...(23) பள்ளபாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டின் விட்டத்தில் நிர்வாணமாய் எப்படி தொங்கிக்கொண்டிருந்தான்? என சூலூர் மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

சூலூர் காவல் நிலையப் போலீஸ் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகாலிங்கம் தனது மனைவியுடன் குடி இருக்கும் வீடு மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வீடு. அந்த மணிகண்டனின் நண்பன் தான் கிருஷ்ண குமார்.

தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணி செய்து கொண்டிருந்த கிருஷ்ண குமாருக்கு. கரோனா காலத்தில்பேருந்துகள் இயங்காததால் வேலையில்லை. அதனால் மணிகண்டன் வீட்டிற்கு அடிக்கடி கிருஷ்ண குமார் வந்து செல்லும்போது ரங்க நாயகியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

Advertisment

இதை மகாலிங்கத்தின் உறவினர்கள் அடிக்கடி பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ரங்கநாயகியின் வீட்டிற்குள் கிருஷ்ண குமார் நுழைந்ததை கண்டு கொண்டனர் உறவினர்கள். உடனே கதவை வெளியே பூட்டி விட்டனர். அச்சத்தில் உறைந்துபோக ஆரம்பித்து விட்டார்கள்.

பின்னர் ரங்கநாயகி எப்படியோ வீட்டிற்கு வெளியே வந்துவிட, வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட கிருஷ்ண குமார் வெளியே போனால் மானம் போய் விடுமே என நினைத்து தூக்கிட்டு கொண்டான்.விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

உடற்கூராய்வு செய்ய கிருஷ்ண குமாரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கும் சூலூர் போலீசார்வழக்கு பதிந்து மேலும் விசாரணையை நீட்டித்து இருக்கின்றனர்.