/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a7124.jpg)
அண்மையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே கன்னியாகுமரியில் சுற்றுலா சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இதேபோல ராமநாதபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் பகுதியில் குளிப்பதற்காக முகமது முஜாஹித் என்ற இளைஞர் பாம்பனை சேர்ந்த நேற்று சக நண்பர்களுடன் கடல் பகுதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மாயமான அவரை மீட்புப் படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் மிதந்த முகமது முஜாஹித்தின் உடல் மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. தொடர்ச்சியாக கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இளைஞர் ஒருவர் மேலும் உயிரிழந்துள்ளது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us