Advertisment

மது போதையில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Youth beaten to under the influence of alcohol; Shocked by the police investigation

மது போதையில் ஏற்பட்ட வாய் தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுபுதைக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி சாலையில் வசித்து வந்தவர் அருண்கார்த்திக். கடந்த பத்தாம் தேதி வெளியே சென்றஅருண்கார்த்திக் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் அருண் கார்த்திக் சக நண்பர்களான சூரிய பிரகாஷ், அரவிந்த் ஆகிய இரண்டு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், விசாரணையில் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லிவிட்டனர். அதனால் போலீசாரும் அவர்களை விட்டுவிட்டனர். தொடர்ந்து அருண்கார்த்திக்கின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு மீண்டும் அதே நண்பர்கள் இருவரையும் பிடித்து கிடுக்குப்பிடியாக விசாரித்ததில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அருண்கார்த்திகை கொலை செய்தது தெரிய வந்தது.

Advertisment

மது அருந்துவதற்காக அருண்கார்த்திக்கை அழைத்துச் சென்ற இருவரும், அவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த அருண் கார்த்திக்கின் உடலை உடனே அருகில் உள்ள கல்குவாரி பகுதியில் சூரிய பிரகாஷ், அரவிந்த் ஆகிய இருவரும் புதைத்துள்ளனர். மோப்பநாய் உதவியுடன் அருண்கார்த்திக்கின் உடலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், சகநண்பர்களாலேயேஇளைஞர்அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation kovai police pollachi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe