/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_236.jpg)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அரசு பயணியர் மாளிகை பின்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில், செப். 24ம் தேதி காலை, ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை பள்ளிபாளையம் காவல்துறையினர் கைப்பற்றினர். சடலத்தின் கழுத்து, தலை பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தன. சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் ரயில்தண்டவாளத்தின் ஓரம் ரத்தம் தோய்ந்த கல்லையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கல் கிடந்த இடத்தில் இருந்து 30 அடி தூரத்திற்கு ரத்தம் சொட்டு சொட்டாக சிதறிக் கிடந்தது.
சடலத்தை, உடற்கூராய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட இளைஞரின் சட்டைப் பையில்ஒரு ஆதார் அட்டை இருந்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது, கொலையுண்ட நபர், ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலை அருகேஉள்ள கொளத்தான்வலசு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33) என்பது தெரிய வந்தது. அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
திருமணமாகாத அவர், நசியனூரில் இயங்கி வரும் பிரபலமான வேட்டி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். ஈரோட்டில் இருந்து அவர் எதற்காக சடலம் கிடந்த பகுதிக்கு வந்தார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலமுருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கூட்டாளிகள் அவரை திட்டமிட்டு பள்ளிபாளையம் பகுதிக்கு அழைத்து வந்து, மதுபோதையில் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)