Advertisment

தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள்; அரசு மருத்துவமனையில் பரபரப்பு

The youth attacked the government hospital under the influence of drugs

நாகர்கோவிலில் இளைஞர்கள் மதுபோதையில் சரமாரியாக தாக்கியசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மதுபோதையில் சில இளைஞர்கள் கும்பலாக வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கேண்டினில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த ஒரு தரப்பு இளைஞர்கள் அவர்களை பிடிக்கும் முயன்றுள்ளனர். அதில் போதையில் இருந்த இளைஞர் கும்பலில் இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர்.

Advertisment

பிடிபட்ட இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் போலீசார் பாதுகாப்புக்காக கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.

nagerkovil police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe