Advertisment

ஆம்பூரில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு!!

 Youth arson during an argument with police in Ambur

திருப்பத்தூரில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இன்று தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகமுழுமுடக்கம்அமலில் உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்அண்ணாநகரைச் சேர்ந்த முகிலன்என்பவர்இருசக்கர வாகனத்தில் வெளியே வந்த நிலையில் காவல்துறையினர் பிடித்து வாகனத்தைப் பறிமுதல் செய்வதாக எச்சரித்த போது காவல் துறையினருக்கும் அந்த இளைஞருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட,அந்த இளைஞர் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் எடுத்து வந்துசம்பவ இடத்திலேயே தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

Advertisment

தற்பொழுது 95 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரிக்கையில்முகிலன்குழந்தைக்கு மருந்து வாங்க வெளியே வந்ததாக அவரது மனைவியும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர். ஆம்பூரில்காவல்துறையினருக்கு எதிராக இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ambur police thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe