Advertisment

செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது!  

Youth arrested who made trouble to nurse

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா தலைநகரம் எனும் ஊரில் ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. செந்துறை தாலுகாவைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை உபயோகப்படுத்திவருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், செவிலியராக பணியாற்றிவருகிறார்.

Advertisment

நேற்று முன்தினம் மதியம் செந்துறை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வசித்து வரும் விஜய பாரதி என்ற இளைஞர் மருத்துவமனைக்குள் வந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டுள்ளார். இதை கவனித்த அந்த செவிலியர், அவரிடம் என்ன வேண்டுமென விசாரித்துள்ளார். அப்போது விஜய பாரதி, தனது அண்ணன் பெயரை கூறி “மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவரை பார்ப்பதற்காக வந்து தேடுகிறேன்” என்று கூறியுள்ளார். அப்போது செவிலியர், அவர் சிகிச்சை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறி இளைஞரை அனுப்பியுள்ளார்.

Advertisment

அதே நாள் இரவு, மீண்டும் மருத்துவமனைக்கு வந்த விஜய பாரதி, அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, பணியிலிருந்த அதே செவிலியரிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டுள்ளார். அந்த செவிலியர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து தூக்கத்திலிருந்து எழுந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள், அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். செவிலியர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.

Ariyalur nurse police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe