தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 ணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த உத்தரவு அமலில் இருக்கும் காலங்களில் அத்தியாசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் ஒரே இடத்தில் இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது அனைவரும் பாதுகாப்பாக இருக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் அவசர தேவைக்கான அரசு அலுவலகங்கள் தவிர மற்றபடி பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படுவதுடன் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாட்களில் அதிக விலைக்கு மது விற்க முயன்றவர்கள் டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தம் மொத்தமாக மதுபாட்டில்களை வாகனங்கள் மூலம் அள்ளிச் சென்று பதுக்கி வருகின்றனர்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள பிலாவிடுதி மேலத்தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பாண்டியராஜன் (வயது 35) என்பவர் தனது குட்டி யானை வாகனத்துடன் புதுப்பட்டி டாஸ்மாக் கடைக்குச் சென்று பார் நடத்துபவரின் துணையுடன் 720 டாஸ்மாக் மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கிக் கொண்டு பிலாவிடுதி செல்லும் தகவல் கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னப்பன், அன்பழகன் உள்பட போலீசார் அக்னி ஆற்றுப் பாலத்தில் தயாராக காத்திருந்த குறிப்பிட்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுப்பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டு வாகனத்துடன் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் பாண்டியராஜனை கைது செய்தனர்.
ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ய தயாராகி உள்ளனர் பலரும்.