
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், கோட்டைவாசல் மேலே வீதியைச் சேர்ந்தவர் 25 வயது இளைஞர் விக்னேஷ். இவர், டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர், தத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் காதல் என்ற பெயரில் நெருங்கிப்பழகியதோடு அவரையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி தனிமையிலும் இருந்துள்ளார்.
இதன் காரணமாக அந்த மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். அந்த மாணவி தான் கர்ப்பமானது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோர் உதவியுடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுமதி, டூவீலர் மெக்கானிக் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து. நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளார்.