/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1981.jpg)
திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (25). இவர், சமோசா செய்து அருகில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரம் செய்துவருகிறார். இவரது கீழ் வீட்டில் இருக்கும் குடும்பத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருந்துவருகிறார். இவர், மோகனின் மனைவியுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். அதன் காரணமாக அம்மாணவி அடிக்கடி மோகனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
சமீபத்தில் அம்மாணவியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதில் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவள்ளி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினார். இதில், மோகனின் மனைவியைப் பார்க்கவரும் மாணவியிடம் மோகன் அத்துமீறியிருப்பதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)