
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஏடிஎம் மையத்தில் பொதுமக்களிடமிருந்து ஏமாற்றி பறிக்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் சந்தை நாட்களில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தெரியாமல் நிற்கும் முதியவர்களை, பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து ஏடிஎம் கார்டுகளை அவர்களிடம் இருந்து வாங்கி, அதற்கு பதிலாக அவர்களிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பிவிட்டு மீண்டும் அந்த ஏடிஎம் கார்டுகளை வைத்து பணம் பறித்து வந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து நூதன முறையில் ஏடிஎம் மையத்தில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ஏடிஎம் மையத்திலிருந்த ரகசிய கேமரா மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில் பெண் ஒருவரை ஏமாற்றி ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்ட சரவணகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமாரிடம் இருந்து 18,000 ரொக்க பணமும், ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Follow Us