Advertisment

கோவில் சிசிடிவி கேமராவில் ஆபாச படம்... இளைஞர் கைது

Youth arrested for showing obscene film on temple CCTV camera!

Advertisment

சென்னையில் கோவில் சிசிடிவி கேமராவின் முன் ஆபாச படம் காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி மேயர் செட்டிபாபு தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் கடந்த 19ஆம் தேதி கோவிலுக்குள் சாமி கும்பிட புகுந்த நபர் ஒருவர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை அங்கிருந்த சிசிடிவி கேமராவிற்கு முன் அருவருக்கத்தக்க வகையில் காட்டியுள்ளார். கோவில் சிசிடிவி காட்சிகளை சோதித்த பொழுது இந்த காட்சிகள் சிக்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள் இதுதொடர்பாக ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் கோவிலில் இருந்த அந்த குறிப்பிட்ட சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர்.இந்நிலையில் அருண் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe