Advertisment

காட்டிற்குள் பதுங்கிய கொலையாளி; சுற்றி வளைத்த போலீஸ்!

Youth arrested for shooting at adoptive parents after girl refused

Advertisment

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது கடையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன், கலையம்மாள் தம்பதிகளின் வளர்ப்பு மகன் 23 வயது பாரதி. இவர் வளர்ப்பு தந்தையின் மகளை தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்க, அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் வளர்ப்பு பெற்றோர்இருவரையும் நாட்டுத்துப்பாக்கியால்சுட்டும், அரிவாளால் வெட்டிவிட்டும் வனத்துறை காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய பாரதியை வனத்துறையினரும் போலீசாரும் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றனர். ஆனால்,பாரதி தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். இந்த நிலையில் பாரதியை பிடிக்க போலீசாரும், வனத்துறையினரும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், மழவந்தாங்கல் மலைப்பாறையில் துப்பாக்கியை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பாரதியை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி, வீச்சரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்புடன் பாரதியை கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

arrested police Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe