
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரைச் சேலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் பண்ணப்பட்டி அருகே உள்ள மாட்டுக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கதிர்வேல். இவன் வேலைக்காகச் சென்ற ஆண்டு கேரள சென்றிருந்த போது கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் செம்மச்சேரி பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தான். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கதிர்வேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை போலீசார் தேடிவந்த நிலையில் சொந்த ஊரான சேலத்திற்கு வந்த கதிர்வேல் தலைமறைவாகி இருந்துள்ளான்.
இந்நிலையில் அவன் பயன்படுத்தி வந்த செல்போன் எண் மூலம் அவனது இருப்பிடத்தைக் கண்டறிந்த கேரள போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் அவனைக் கைது செய்தனர். ஓமலூர் அரசு மருத்துவமனையில் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்த அவனைச் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து கேரளா அழைத்துச் சென்றனர்.